Clicky

அமரர் சாவித்திரி எஸ்தர் சந்திரபால்
இறப்பு - 09 APR 2020
அமரர் சாவித்திரி எஸ்தர் சந்திரபால் 2020 வடலியடைப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நாம் உங்களுடன் அதிகம் பழகமுடியவில்லை மாமி. நாம் சின்னப்பிள்ளைகளாக இருக்கும் பொழுதே நாட்டுச்சூழ்நிலைகளால் நீங்கள் லண்டன் வந்துவிட்டீர்கள். ஆனால் உங்களைப் பற்றிய நினைவுகளுடனேயே நாம் வளர்ந்தோம். எமது அம்மா அப்பா உங்களைப் பற்றி நிறையச் சொல்வார்கள். நான் எனது வாழ்க்கையில் பல கஷ்டங்களைக் கடந்து நாட்டை விட்டு வெளியேறி வந்து உங்களை சந்தித்த பொழுது, என் கைகளை இறுக்கிப் பிடித்து கெட்டிக்காரி என்று சொன்னது இன்றும் என் காதுகளுக்குள் ஒலிக்குது மாமி. எப்பவுமே யார் வந்தாலும் சுவையாக உணவு பரிமாறியே அனுப்புவீர்கள். உடல்நலமில்லாவிட்டாலும் அதை நீங்கள் தவறியதில்லை. உறவினர், நண்பர் வீட்டு நன்மை தீமைகள் எல்லாவற்றுக்கும் எந்த நாட்டில் நடந்தாலும் மாமாவும் நீங்களும் முன்னின்று நடத்துவீர்கள். மாமாவை இனித் தனித்து காணப்போவதை கற்பனை பண்ணமுடியவில்லை மாமி. தமிழவை உங்கள் பிறந்தநாள்களில் பாட்டுப் பாடுவாவே. Dr பாட்டி என்று. இன்று உங்கள் படத்தைப் பார்த்ததும் அவ அதனையே நினைவுபடுத்தினா. எனது அப்பாவின் குடும்பத்தில் மூத்த மகளாக ஏழு சகோதரங்களுக்கு அக்காவாக பிறந்தீர்கள். இன்று அவர்களுக்கென்றுயிருடன் இருந்த ஒரே அக்காவையும் இழந்து தவிக்கிறார்கள் மாமி. உங்களைத் தன் தாயாகவே மதிக்கும் எனது அம்மா, தமது அம்மாவிற்கு பின்னர் உங்களில் தன் தாயைக் கண்ட உங்கள் பெறாமகள்கள் அனுசா, கங்கா எல்லோருக்கும் ஏதமே சொல்லாமல் போய்விட்டீர்களே மாமி. உங்களுக்கு இந்த அமைதி இந்நேரத்தில் தேவையென எம் மனங்கள் சொன்னாலும் இரத்தவுறவொன்றை எம் குடும்பத்தின் மூத்த தாயை இழந்ததில் மனது வலிக்கிறது மாமி.
Write Tribute