Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 SEP 1954
இறப்பு 16 SEP 2020
அமரர் சாவித்திரி இலக்குமணபிள்ளை 1954 - 2020 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கிழக்கு கண்ணகி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு முகத்துவாரத்தை வதிவிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சாவித்திரி இலக்குமணபிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓர் உணர்வான ஒற்றைச் சொல் அம்மா
உன் அன்பின் கதகதப்பும்
உன் வலிக்காத தண்டனையும்
இனி யாராலும் தரமுடியாதம்மா..

அம்மா! என்று குரல் எழுப்புகிறோம்
ஆனால்... பதில் இல்லையே!
நீங்கள் பிரியவில்லையம்மா ..
எங்களோடு வாழ்ந்துகொண்டு
இருக்கிறீர்கள் அம்மா ...

எங்கள் அன்புத்தாயே!
எங்கள் ஆசை அம்மாவே
ஆண்டு இரண்டு மறைந்து போனாலும்
எப்பொழுதிலும் என்றும் ஆறாத
துயரத்தில் ஆழ்ந்து இருக்கின்றோம் அம்மா...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்