1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 SEP 1954
இறப்பு 16 SEP 2020
திருமதி சாவித்திரி இலக்குமணபிள்ளை
வயது 66
திருமதி சாவித்திரி இலக்குமணபிள்ளை 1954 - 2020 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கிழக்கு கண்ணகி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு முகத்துவாரத்தை வதிவிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சாவித்திரி இலக்குமணபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆலம் விழுதுகள் போல்
ஆயிரம் உறவுகள் பற்றி
குடும்ப உறவுகள் வீழ்ந்து விடாது
வேரென இருந்தீரே அம்மா!
இதயமில்லா இறைவன்
தங்கள் இன்னுயிரை பறிக்க
சோகத்தை தந்து விட்டு
சொல்லாமல் சென்றதென்ன?
நல்வழிகள் காட்டி எமை ஆளாக்கி
நடுவினில் தவிக்க விட்டு மறைந்ததென்ன?
நேற்றுவரை எம்முடனிருந்தாய்
அன்பை அமுதுடன் ஊட்டி வளர்த்தாய்
காலமெல்லாம் எமைக் காத்திருப்பாய் என்றெண்ண
விண்ணோடு போனாயோ அம்மா!
 ஆற்றொண்ணாத் துயரமது
 ஊற்றாக ஓடுதம்மா!
என்றும் எம் உதிரங்களில்
உயிரணுக்களாய் கலந்திருப்பாய் அம்மா! 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்