

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி இல. 136 ஆறுமுகம் வீதியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட சவரிமுத்து சின்னத்தம்பி அவர்கள் 06-09-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து, அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமசாமி, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தையல்நாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,
குழந்தையேசு(லண்டன்), பெனடிற்றாமாலினி(ஆசிரியர் கிளி/இராமநாதபுரம் மகாவித்தியாலயம்), எலிசபெத்ராணி(இத்தாலி), திரேசாசெல்வராணி(இத்தாலி), கிறிஸ்சாந்தினி(சுவிஸ்), ஜெயக்குமார்(லண்டன்),ஹெலன்றாகினி(வட்டக்கச்சி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இந்துமதி, பூலோகராஜா(அதிபர்- கிளி/வட்டக்கச்சி மத்திய கல்லூரி), சற்குணராசா, சுரேஸ், பாக்கியராசா, ஜெயலலிதா, புவனேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அனூஜன், விதுர்சியா, டனிஸ்ரன்யூட், கிஷோபிகா, ஜினுஷா, ஜிந்துஷா, நிலக்சன், நிலாணி, ஏர்னேஸ்தோ, ஸ்தேபனோ, சொபியா, பவசாரன், பவநிதன், பவிஷா, கனிஷா, அபிஷேகன், அபிஷ்னா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 09-09-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு புனித சூசையப்பர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மாயவனூர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.