2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணம் கொய்யாதோட்டம் 4ம் குறுக்குத் தெருவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சவரிமுத்து திரேசம்மா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா என்னும் உயர்ந்த உறவை
நாம் இழந்து இன்றுடன்
ஆண்டுகள் இரண்டு பறந்தோடிச் சென்றாலும்
அமுதூட்டி அரவணைத்த அன்புத் தாய் எனும்
அற்புதத்தைத் தொலைத்து விட்டு
அன்பு நினைவுகளை மட்டுமே
சுமந்தபடி வாழுகின்றோம்.
நீங்கள் மறைந்து இரண்டு ஓடி மறைந்தாலும்
உங்கள் ஒளிமுகத்தை முன்நிறுத்தி என்றும்
உங்கள் மீளா நினைவுகளுடனே வாழுகின்றோம்.
நினைவில் எம்முடனும் நிஜத்தில்
இறைவனிடமும் கலந்திட்ட உங்கள்
நினைவோடு வாழ்ந்து கொண்டிருக்கும்
என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
அன்புப் பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்