Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 OCT 1950
இறப்பு 18 JUN 2021
அமரர் சந்தியோ மதியாபரணம்
வயது 70
அமரர் சந்தியோ மதியாபரணம் 1950 - 2021 நாவாந்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், குருநகரை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சந்தியோ மதியாபரணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை
நாம் இழந்த துயரை ஈடு
செய்ய முடியாமல் தவிக்கின்றோம்!

உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

 வதனங்கள் மட்டும் போதும்
என்று புன்னகைக்கு வெண்ணிலவாய்
புகைப்படத்தில் ஒளி தந்து புன்
சிரிப்புடன் எங்களை வாழ்த்தி நிற்கும் தெய்வமே!

நிழலாக இல்லாமல் நிஜமாக வந்திடுவீர்!
 காலங்கள் கடந்து சென்றாலும் ஒவ்வொரு
நொடிகளிலும் இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை
நாங்கள் உணருகின்றோம்..

அன்னாரின் நினைவஞ்சலி செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 19 Jun, 2021