

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Edgware ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சத்தியசீலன் அப்புத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்றென ஆனாலும்
அழியவில்லை எம் சோகம்
வாழ்க்கை என்ற வசந்த காலம்
வரும் போதே எம்மை துடிக்க விட்டு
கணப் பொழுதில் சென்றது ஏன்?
உங்களோடு நாம் இருந்த நாட்கள் தான்
எம் வாழ்வில் பொற்காலங்கள்
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
சொந்தமான சொந்தம் நீங்கள் இல்லையே
அன்பாலும் பண்பாலும் அனைவர்
உள்ளமும் நிறைந்தாயே
உங்கள் இழப்பால் உணர்ந்தோம்
வாழ்வு அது நிஜமில்லை என்று
எல்லா உறவுகளையும் ஏங்கி தவிக்கவிட்டு
வெகு விரைவாக எங்கு சென்றீர்கள்!
ஆண்டுகள் எத்தனை ஆனாலும்
மனம் ஆற மறுக்கிறது
சிரித்த முகத்தோடும் செயற்திறன் தன்னோடும்
செம்மையாய் வாழ்ந்த அப்பா!
விதித்ததோர் விதியதால் விண்ணகம்
சென்றதைப் பொறுத்திட முடியுமோ தான்?
அப்பா, உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
கண்முன்னே வாழ்ந்த
காலம் கனவாகிப் போனாலும்
எங்கள்முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் அப்பா!
உங்கள் ஆத்மா அமைதிக்காக
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!