5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சதாசிவம் வள்ளிப்பிள்ளை
வயது 87
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், குஞ்சிப்பரந்தன், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சதாசிவம் வள்ளிப்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்தாண்டுகள் கடந்தாலும்
ஆறாத துயருடன் - நாங்கள்
நினைக்க நினைக்க
நாடி, நரம்பு விரைக்கிறதே
நடந்தது கனவாக மாறவேண்டுமென
இறைவனை கெஞ்சுகிறதே...
கலப்படம் இல்லா உன் அன்பு
கலங்க வைக்குது எனை இங்கு
எங்களைத் தனிமையில் விட்டதில்லை
இன்றோ தவிக்க விட்டுச் சென்று விட்டாய்
திருப்ப முடியாத காலத்தை
உங்கள் நினைவுகளுடனும்
நிழல்ப்படத்தினூடாகவும்
திரும்பிப்பார்க்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
சதாசிவம் கைலைநாதன், சதாசிவம் மேகநாதன், சதாசிவம் லோகேஸ்வரி மற்றும் குடும்பத்தினர்