மரண அறிவித்தல்
மலர்வு 09 MAY 1934
உதிர்வு 14 MAY 2021
திருமதி சதாசிவம் வள்ளிப்பிள்ளை 1934 - 2021 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், குஞ்சிப்பரந்தன், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் வள்ளிப்பிள்ளை அவர்கள் 14-05-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,  

காலஞ்சென்ற சதாசிவம் கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நாகம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தங்கராசா அவர்களின் அன்பு மைத்துனியும்,

கைலைநாதன்(கனடா), லோகேஸ்வரி(இந்தியா), மேகநாதன்(சிவா- கனடா- ஒமீரா ஜுவல்லரி உரிமையாளர்), காலஞ்சென்ற மகேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகேஸ்வரி(கனடா), றஞ்சினி(கனடா-ஓமீரா ஜுவல்லரி), கயிலைநாதன்(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற விக்னேஸ்வரன்(சிறி), கணேஸ், ஜெயம், தர்சினி பாஸ்கரன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

காலஞ்சென்ற சுபாஸ்கரன்- பவித்ரா, உஷாநந்தினி, ராஜசேகர், கருணாகரன் கல்யாணி, பிரபாகரன், ராம்பியர், மிதுரன்- நிரோஜா, சஞ்சீவன்- கீர்த்தனா, தர்சிகா- சிறிகாந்தன், இளங்கோ- லட்சா, கயூரன்- லட்சிகா, தபி, கௌசி, தனிஸ், ஒமீரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சயந், சச்சின், அஸ்வினி, அபிநயா, அர்சனா, ஆரியன், அரிசா, மாயா, மக்சன், நிசாந்தன், தர்சன், சமித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் பூதவுடல் தற்போதைய COVID 19 சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கேற்ப மே மாதம் 25ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று மாலை 7 மணிமுதல் 10 மணிவரை பொது மக்களின் பார்வைக்காக DRIVE THROUGH VISITATIONனாகவும் முட்பதிவுசெய்தவர்கள் உள்ளேசென்று பார்வையிடக்கூடியதாகவும், அதனை தொடர்ந்து மே மாதம் 26ம் திகதி புதன்கிழமை அன்று காலை 8 மணிமுதல் 10 மணிவரை குடும்ப உறுப்பினர்களுடனும், முற்பதிவு செய்தவர்களுடன் மட்டும் இல 8911 Woodbine Ave, Markham இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் அதே இடத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

நேரடி ஒளிபரப்பு: https://video.ibm.com/channel/chapelridgefh2


தகவல்: மேகநாதன் குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவா(ஓமீரா ஜுவல்லரி) - மகன்
கைலைநாதன் - மகன்
றஞ்சினி(ஓமீரா ஜுவல்லரி) - மருமகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos