Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 20 JAN 1965
இறப்பு 08 MAY 2026
திரு சதாசிவம் சிவஞானராசா (குலம்)
வயது 61
திரு சதாசிவம் சிவஞானராசா 1965 - 2026 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம், பெருங்காடு வேம்படியடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Brugg AG வை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் சிவஞானராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

குடும்பம் என்னும் கோயினிலே
மனை சிறக்க வாழ்ந்த எங்கள் அப்பாவே
நாட்கள் 31 போனாலும்
அழியாது நம் சோகம் மீளாது எம் துயரம்

உரிமை சொல்ல எத்தனை
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா என்ற உறவுக்கு யாருமே நிகரில்லை

எம்மோடு இருந்து
எம்மையெல்லாம் இயக்கி
எமக்கு வழிகாட்டி...

மீண்டுமொரு பிறப்பிருந்தால்
எங்களிடமே வந்திடுங்கள்!
மாதம் ஒன்று மட்டுமல்ல உயிருள்ள வரை
நாமென்றும் அஞ்சலிப்போம்
உங்கள் ஆத்மா சாந்திபெற

காவல் தெய்வமாய் எங்களோடு
என்றும் நீங்கள் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்....

உங்கள் ஆத்மா சாந்தியடய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 07-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் Pfarrei st.karli, spitalstrasses 91, 6004 Luzern எனும் முகவரியில் நடைபெறும். அத்தருணம் தாங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அவரது ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து இடம்பெறும் மதியபோசன் நிகழ்விலும் கலந்து சிறப்பிற்க்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கண்ணன் - சகோதரன்
சுதன் - சகோதரன்
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்