Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 11 OCT 1938
மறைவு 05 JUL 2020
அமரர் சதாசிவம் லோகேஸ்வரன்
சட்டத்தரணி, நொத்தாரிஸ், ஜே. பி, யூ. எம், முன்னாள் தலைவர்- யாழ் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை
வயது 81
அமரர் சதாசிவம் லோகேஸ்வரன் 1938 - 2020 புத்தூர், Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், புத்தூர், கோப்பாய், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சதாசிவம் லோகேஸ்வரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  

எங்கள் அன்புத் தெய்வமே!
அணையாத சுடராக
எமைக் காத்த அப்பாவே!
இன்னும் ஆறவில்லை எங்கள் துயரம்
 எங்கே மறைந்தீர்கள்...?

உங்கள் உயிர் காக்க
ஆண்டவனை மன்றாடினோம்- ஆனால்
எங்களை ஏமாற்றி விட்டு
வெகு விரைவாய் சென்று விட்டீர்கள்!

கனிவான புன்சிரிப்புடன்
பாசம் கொண்டாடி மகிழும்
உங்கள் திருமுகம்
காணத் துடிக்கின்றோம்!

உங்கள் ஆசைகளை
நாங்கள் நிறைவேற்ற!
எங்களைத் தெய்வமாக வழிநடத்தி
ஆசி செய்யுங்கள்.....!

எத்தனை காலமானாலும்
எங்கள் இதயம் உள்ளவரை
உங்கள் நினைவோடு நாமிருப்போம்..! 

தகவல்: குடும்பத்தினர்