Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 11 OCT 1938
மறைவு 05 JUL 2020
அமரர் சதாசிவம் லோகேஸ்வரன்
சட்டத்தரணி, நொத்தாரிஸ், ஜே. பி, யூ. எம், முன்னாள் தலைவர்- யாழ் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை
வயது 81
அமரர் சதாசிவம் லோகேஸ்வரன் 1938 - 2020 புத்தூர், Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், புத்தூர், கோப்பாய், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்,  அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சதாசிவம்  லோகேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அமைதியின் உருவமாகவும்
அடக்கத்தின் இருப்பிடமாகவும்
பண்பின் பெருந்தகையாகவும்

பாசத்தின் உறைவிடமாகவும்
எம்மத்தியில் அன்பு ஒளியாகவும்
இருந்த எங்கள் ஐயாவே!

நீங்கள் இல்லா இல்வாழ்க்கை
நிறைவற்றதாகவே இருக்கிறது
உங்களைப் போல் யார் வருவார்.

இனி இன்பத்தில் இன் முகம் காட்டவும்
துன்பத்தில் தோள் கொடுக்கவும்
இவ்வுலகில் நாம் வாழ்ந்திட இறைவனாய்
இருந்து எம்முடன் துணை நிற்க வேண்டுகிறோம்.

தகவல்: குடும்பத்தினர்