1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சதானந்தசிவம் சுப்பிரமணியம்
1959 -
2019
அச்சுவேலி பத்தமேனி, Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சதானந்தசிவம் சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பாவே அன்பானவரே
அழைக்கின்றோம் நாங்கள் இன்று
அணைத்திட வருவாயோ
அழுகையுடன் காத்திருக்கின்றோம்
நாம் இங்கு
எங்களைப் பாதுகாப்பாகப் பார்த்து
நல்லவற்றைக் கற்றுத் தந்து
நாமிங்கு நலமாய் வாழ்வதைப் பார்த்திட
நீங்கள் இல்லையே அப்பா
என்று உம்மை இனிக் காண்போமோ அப்பா
மாதங்கள் பன்னிரண்டு ஆனாலும்
ஆறாத் துயரில் தவிக்கின்றோம் நாம்
ஆயிரம் உறவுகள் இருந்து என்ன
உன்னைப்போல் அன்பு காட்ட
ஆறுதல் கூறிட யாரும் இல்லையே அப்பா
முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய் போகின்றோம்
ஐயனே உங்கள் சிரித்த முகம்
பார்க்காமல் தவிக்கின்றோம்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை
பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய எமது குடும்பம் சார்பாக இறைவனை பிரார்த்திக்கிறேன் ..அண்ணாரின் குடும்பத்திக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோன்