

யாழ். சுன்னாகம் தெற்கு பெரிய மதவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சதானந்தன் நாகேஸ்வரி அவர்கள் 15-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்தியநாதன், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சதானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
புஸ்பராஜ்(பிரான்ஸ்) அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், நடராஜா, சிவபாக்கியம், குலமணி, சுப்பிரமணியம், புவனேஸ்வரி மற்றும் அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பகவதி அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஈஸ்வரானந்தன், விபுலானந்தன், யோகானந்தன், இரத்தினானந்தன் மற்றும் ஆனந்த சகுந்தலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அக்சயா, அக்சரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மாமி, போனவருடம் நாங்கள் சுன்னாகம் வந்த போது எங்களது வீட்டுக்கு அடிக்கடி சந்தோசமாக ஓடி ஓடி வந்து போனீர்களே... அது தான் இன்னும் எங்கள் நெஞ்சங்களில் நிலைத்திருக்கிறது. யாரும் நினைக்கவில்லை உங்களை...