யாழ். நல்லூர் வைமன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சர்வானந்தன் பூவதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
ஐயிரண்டு திங்கள் தவமிருந்து
ஐவராய் எம்மை பெற்றெடுத்த
அன்னையின் நினைவு நாள்
தந்தையை இழந்த எமை
தந்தைக்கு தந்தையாக
பாசமிகு அன்னையாக
நல்லறிவை புகட்டும்
ஆசானாகவும் இருந்து
வளர்த்தெடுத்த அன்னை
எம்மை விட்டு பிரிந்து
ஒரு திங்களானாலும்
வாடி நிற்கின்றோம்!
அன்பினால் பண்பினால்
நட்பினால் அரவணைப்பால்
எம்மை ஆளுமை கொண்டு
எங்கள் உள்ளங்களில்
குடியிருக்கும் அன்னையை
என்றென்றும் நினைத்திருப்போம்!
அன்னையின் ஆத்மா சாந்தியடைய
நல்லைக் கந்தனின்
பாதாரவிந்தங்களை பணிகின்றோம்.
ஓம் சாந்தி!!! சாந்தி!!சாந்தி!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உணவு வழங்கியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Please accept our heartfelt condolences .