1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சறோஜினிதேவி தணிகாசலம்
வயது 85

அமரர் சறோஜினிதேவி தணிகாசலம்
1935 -
2021
நாயன்மார்கட்டு, Sri Lanka
Sri Lanka
Tribute
18
people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், ஏழாலை, கோண்டாவில், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சறோஜினிதேவி தணிகாசலம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமிகு நிழல் பரப்பி
எங்கள் ஏற்றமிகு வாழ்விற்கு
மெழுகுவர்த்தியாய் தனையுருக்கி
ஒளி பரப்பிய எங்கள் தாயே!
அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த அன்னையே
என்றும் அணையாத சுடராய்
எல்லோர் மனதிலும்
வாழ்ந்து கொண்டு இருக்குறீர்கள் அம்மா.
கணப்பொழுதில் நடந்தது என்ன
உன் இறுதி மூச்சு காற்றோடு கலந்தது என்ன
நம்ப முடியவில்லை நடந்தது என்னவென்று
அம்மா அம்மா யாரைக் கூப்பிடுவோம்
எழுந்து எமக்கு ஒரு முத்தம் தாராயோ!
ஆண்டுகள் ஒன்று உருண்டு ஓடினாலும்
அலைகடல் அலை அலையாக என்றும்
உங்கள் அன்பு அலை நினைவுகளுடன்....
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்