யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி பாலேந்திரா அவர்களின் நன்றி நவிலல்.
தாவடியின் நாயகியே
தமிழ் வளர்த்த சரஸ்வதியே
புன்னகையை பொன்னகையாய்
தன்னகத்தே கொண்டவரே
வாழ்க்கை எனும் ஓடத்திலே
உத்தமியாய் வாழ்ந்தவரே
எந்நிலைமை வந்தபோதும்
மண்வாசனையோடு இருந்தவரே
மணாளன் அழைப்பை ஏற்று
சென்றீரோ எமைவிட்டு
கலங்கி நிட்கும் புத்திரரை
ஏன்தான் நீ விட்டகன்றாயோ
உன் ஆத்ம சாந்திக்காய் இறைவனை வேண்டுகிறோம்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Our deepest condolences .We will miss you Aunty, Mythily