6ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மன்னார் இலுப்பைக்கடவையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரவணமுத்து தம்பிராஜா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஆறு போனாலும்
அழியாது நம் சோகம் மீளாது எம் துயரம்
மறையாது உங்கள் நினைவு
ஆறாத் துயரில் ஆழ்த்தி விட்டு
மீளாத் துயில் கொண்டதேனோ!
எங்கள் வீட்டு நிலவாக ஒளி வீசி
மகிழ வைத்தீரே
யார் கண்பட்டு
மறைந்து போனீரோ
தாமரை மலர் நீரில் ஆடுவதுப்போல
நாங்கள் உமைப்பிரிந்து தத்தளித்து
மனம் ஆடுகின்றதே எங்கள் துயரம்
விதித்ததோர் விதியதால்
விண்ணகம் சென்றதைப்
பொறுத்திட முடியுமோ தான்?
அப்பா, உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
உங்களை ஒரு போதும் மறவாமல் வணங்குகின்றோம்
இறைவன் திருவடியில்
சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்