யாழ். கந்தர்மடம் உடையார் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், யாழ் பிறவுண் வீதியை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து சிவலோகநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலும்.
அப்பாவே எங்கள் அகராதியே எங்கப்பா சென்றீர்கள் ...?
காலனவன் கைப்பிடிக்குள் சிக்குண்டீரோ... ?
கந்தன் காலடியில் கட்டுண்டீரோ?
எங்கள் பொக்கிஷமே அப்பா எங்கு சென்றீர்கள்??
அம்மா வழிமேல் விழிவைத்து வீதியையே பாத்த வண்ணம் உள்ளார்
நீங்கள் வருவீர்கள் என்று.
எங்கப்பா சென்றீர்கள்.
நல்லயம்பதி ஆறுமுகசாமியாரின் பாதங்களில் இளைபாற சென்றீரோ?
முருகனே கதியேன்று இருந்தீர்கள் .
முருகனின் பாதங்களில் உங்கள் ஆத்மா சரணடையட்டும்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
அன்னாரின் இழப்பால் நாம் துயருற்று இருந்த வேளையில் கால நேரம் பாராது ஓடோடி வந்து நம் துயரில் பங்கு கொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள் மற்றும் இன்று வரைக்கும் எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்புள்ளங்களுக்கும், தொலைபேசி ஊடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.