யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து இராசப்பா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் குடும்பத்தின் குலவிளக்கே அப்பா!
நாட்கள் 31 கடந்தாலும் எமை
ஆளாக்கிய தந்தையின் பிரிவு
ஆறாது என்றுமே எம் மனதில்
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம்முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் அப்பா!
இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது அப்பா...
மறுபடியும் உங்களைப் பார்க்க மாட்டோமா என
ஏங்கித் தவிக்கிறோம் அப்பா...
ஓயாது உங்கள் நினைவு வந்து வந்து
எதிர்கொள்ள ஒவ்வொரு கணமும்
துடிதுடிக்க உயிரோடு வாழ்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 08-07-2026 புதன்கிழமை அன்று காலை 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், வீட்டுக்கிருத்திய கிரியைகள் 10-07-2026 வெள்ளிக்கிழமை பி.ப 11:00 மணியளவில் அவரது இல்லதில் நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
5/1 கருவப்புலம் வீதி,
(உப ஒழுங்கை 1)
கொக்குவல் கிழக்கு,
கொக்குவில்.
Sairam Sister Mirnalini, Despite the loss of the physical presence,we know that God has assigned this soul to watch over you throughout your life. We feel for your loss, our most sincere condolences.