Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 JAN 1936
இறப்பு 04 JAN 2024
அமரர் சரவணமுத்து கந்தசாமி
பிரபல வர்த்தகர்- அனலைதீவு
வயது 87
அமரர் சரவணமுத்து கந்தசாமி 1936 - 2024 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சரவணமுத்து கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 22-12-2024

நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
இன்றுடன் ஓராண்டு முடிந்தாலும்!

கடந்துவிட்ட ஒருவருடத்தில்
கலங்காத நாட்களில்லை
நீங்கள் இருக்கும் போது
ஆனந்தக் கண்ணீர் தந்த விழிகள்
இப்பொழுது தூக்கம் தொலைத்து
கண்ணீர் வடிக்குதே அப்பா!

அளவில்லா அன்பையும்
அளக்க முடியாத பாசத்தையும்
அளவில்லாமல் கொடுத்து விட்டு
எங்கு தான் சென்றீரோ?

நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியவில்லை அப்பா!
உங்கள் நினைவலைகள் எங்கள்
கண்முன்னே நிழலாடுகிறதே!

ஓராண்டு என்ன எத்தனை ஆண்டுகள்
ஓடி மறைந்தாலும் உங்கள் அன்பும் பாசமும்
என்றும் எம் நினைவை விட்டு அகலாது

என்றும் உங்கள் நினைவுகளுடன்
வாழும் குடும்பத்தினர்...

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos