யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் பட்டினசபை ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து ஞானேஸ்வரி அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை எதிர்வரும் 13-08-2021 வெள்ளிக்கிழமை அன்று காலை 08:00 மணியளவில் யாழ். கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் சபிண்டீகரணக் கிரியை 15-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 11:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்களும் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் கிரியைகளிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.