யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சாரதா விக்னேஸ்வரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டாகியும்
ஆறவில்லை எங்கள் சோகம்
தாண்டிப் பல ஆண்டுகள் போனாலும்
மாறாது உங்கள் பாசம்
கூண்டுப் பறவையாக கூடிநாம்
வாழ்வதைக்கண்ட காலன்
தூண்டில் போட்டுக் கவர்ந்தானோ
எங்கள் தெய்வமே!!!
பத்துமாதங்கள் பக்குவமாய்
வயிற்றில் சுமந்து
சத்துள்ள உணவுவகைகளை
அறுசுவைக்குன்றாது
நித்தம் ஊட்டிவளர்த்த கண்கண்ட தெய்வமே
சத்தமில்லா உலகத்திற்கு சென்றது
எங்கே அம்மா!!!
எம் உள்ளத்தின் இருக்கும் தெய்வம்
நீ அம்மா எத்தனை ஆண்டுகள்
சென்றாலும், உன் பாசத்திற்கு
நாம் பட்ட கடன் தீராதம்மா!
உந்தன் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் உயிர் உள்ள வரை வாழுமம்மா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..