கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஒவ்வொரு விடியலிலும் ஓராயிரம் மரணங்கள்
மரணம் என்பது மலிந்த ஒன்றாகிவிட்டது எங்கள்
வாழ்விலும் அது நிழல் போல தொடருகிறது. மூச்சுக்காற்று ஈந்து முன்னூறு நாள்
தொடசுமந்து மாசில்லா மாரமுதூட்டிய - பெரும்
தூசில்லா துயவளே! எங்கள் தாயவளே!
உந்தன் இழப்பு எங்களால் ஈடு செய்ய முடியாதவை
நீங்கள் நோயினால் துவண்டு இருந்தீர்கள்
நான் வேதனையால் துடித்திருந்தேன்.
தூக்கம் மறந்து உணவிழந்து துடியாய் துடித்து இருந்தேன்
மனதை கல்லாக்கி வரும் உதட்டால் மட்டும் சொல்லுகிறேன்
சென்று வாருங்கள் தாயே
இப்பொழுது பூமியில் இருப்பதும்
ஒன்று இறப்பதும் ஒன்றாகி விட்டது உயிருக்கும்
உறவுக்கும் மதிப்பு இழந்தே போகிறது
நித்திய உறக்கத்தில் நிம்மதியாய் விழிமூடுங்கள் தாயே!
சென்று வாருங்கள் தாயே
Write Tribute