யாழ். கோண்டாவில் தில்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி வைரமுத்து அவர்கள் 12-06-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லர் செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வைரமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சகுந்தலாதேவி, ராஜன், சாந்தி, காலஞ்சென்ற வசந்தன், மஞ்சுளா, காலஞ்சென்ற சசிகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
றொபின்சன் அவர்களின் அன்பு அத்தையும்,
மகேஸ்வரி, பத்மா, காலஞ்சென்ற பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாக்கியம், கோவிந்தசாமி, காலஞ்சென்ற முத்துலிங்கம், சூரியகலா, இராஜதுரை, தவமணிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
குமாரபதி, கல்யாணி, மகேந்திரன், விஜிதா, காலஞ்சென்ற கலேந்திரன், பெளசிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஜித்குமார், றுக்சி, சஜானி, கெளசிகன், சரண்யா, யதுர்சனா, அபர்ணன், மிதுனன், ஆகாஸ், ஆருசன், அபிசா, தக்ஷயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
இனியவன், இளவேனில் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஒவ்வொரு விடியலிலும் ஓராயிரம் மரணங்கள்
மரணம் என்பது மலிந்த ஒன்றாகிவிட்டது எங்கள்
வாழ்விலும் அது நிழல் போல தொடருகிறது.
மூச்சுக்காற்று ஈந்து முன்னூறு நாள்
தொடசுமந்து மாசில்லா மாரமுதூட்டிய - பெரும்
தூசில்லா துயவளே! எங்கள் தாயவளே!
உந்தன் இழப்பு எங்களால் ஈடு செய்ய முடியாதவை
நீங்கள் நோயினால் துவண்டு இருந்தீர்கள்
நான் வேதனையால் துடித்திருந்தேன்.
தூக்கம் மறந்து உணவிழந்து துடியாய் துடித்து இருந்தேன்
மனதை கல்லாக்கி வரும் உதட்டால் மட்டும் சொல்லுகிறேன்
சென்று வாருங்கள் தாயே
இப்பொழுது பூமியில் இருப்பதும்
ஒன்று இறப்பதும் ஒன்றாகி விட்டது உயிருக்கும்
உறவுக்கும் மதிப்பு இழந்தே போகிறது
நித்திய உறக்கத்தில் நிம்மதியாய் விழிமூடுங்கள் தாயே!
சென்று வாருங்கள் தாயே