வீட்டிற்குச்சரஸ்வதியாய் என்னம்மா என்னாச்சி எப்படி இருக்கிறீங்களம்மா என்ற பரிவுச் சொற்களால் பாசத்தைச் சொரிந்து,எந்நேரமும் அர்ச்சனைத் தட்டுடனும் தலையில் சூடிய மலர்களும் மலர்ந்த முகமுமாய் வலம்வந்த எங்கள் ராசாத்தி அக்கா உங்களின் மறைவுச் செய்தி கேட்டு மனமுடைந்து விட்டோம். மரணத்தைத் தொடாத மானிடன் இல்லை. அவன் எப்படி வாழ்ந்தான் என்பதே வாழ்க்கையின் அர்த்தம். அக்கா உங்களின் வாழ்க்கையே உறவுகளின் பிணைப்பு அம்மா அப்பா அக்கா அண்ணா தங்கை தம்பி என்ற சொற்களின் உருவமே உங்களின் அன்பும் அரவணைப்பும் தான் அக்கா. இவ்வுலகத்தில் சேர்ந்து வாழ்ந்த அண்ணனுடன் அவ்வுலகத்திலும் சேர்ந்து வாழ ஆண்டொன்றில் சென்று விட்டீர்களா அக்கா. உங்களின் பிரிவால் துயருற்றிருக்கும் கணவர் பிள்ளைகள் சகோதர ர்கள் சகோதரிகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எங்கள் குடும் பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு உங்களின் ஆத்மா ஆண்டவனடி சேரப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்சாந்தி.
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.