Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 27 DEC 1949
இறைவன் அடியில் 06 SEP 2023
அமரர் சரஸ்வதி நடராஜா 1949 - 2023 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரஸ்வதி நடராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா! அம்மா! அம்மா!
எங்கு சென்றீரோ!!
ஓராண்டு ஆகியும் உம்மை எண்ணி
ஏக்கத்துடன் காத்திருக்கிறோம்..
மீண்டும் ஒருமுறை உம் முகம் காண

கருவறையில் தொடர்ந்த நம் உறவை
காலனவன் கல்லறையில் புதைத்தாலும்
நீங்காத உம் நினைவுகளுடன்
தினந்தோறும் போராடுகிறோம்

பேச மொழி தந்தீர் வாழ வழி தந்தீர்- ஆனால்
நீங்கள் போன வழிதனை
சொல்லாது சென்றது- தினமும்
உம்மை சுவரோவியமாய் பார்பதற்கோ??

வாரும் அம்மா எம்மை பாரும்
வற்றாத நதிபோல் நம்மில் கலந்துவிடும்
எம் வாழ்வின் வழிகாட்டியாய் தினம்
இருக்க வேண்டிகின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 07 Sep, 2023
நன்றி நவிலல் Fri, 06 Oct, 2023