Clicky

மரண அறிவித்தல்
அமரர் சரஸ்வதி கருணைநாதன் வயது 78 பிறப்பு : 13 JUN 1941 - இறப்பு : 11 APR 2020
அமரர் சரஸ்வதி கருணைநாதன் 1941 - 2020 அராலி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும்,  வட்டுக்கோட்டை, கொழும்பு  ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி கருணைநாதன் அவர்கள் 11-04-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான  வல்லிபுரம் சுந்தரலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கருணைநாதன்(ஓய்வுபெற்ற புகையிரத பொறியியலாளர் ) அவர்களின் அன்பு மனைவியும்,

கணேசன், காலஞ்சென்ற  சுப்பிரமணியம், சோதிவடிவேல், திருமதி வரதலட்சுமி பொன்னையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அம்பலவாணநாதன், குணாம்பிகை, ஞானாம்பிகை, புனிதாம்பிகை, சுகுணநாதன், அமிர்தாம்பிகை, நிமலநாதன், விமலாம்பிகை, கவிதாம்பிகை, கலாநாதன், சோமநாதன், விவேகாம்பிகை ஆகியோரின் அன்பு  மைத்துனியும்,

சோதிநாதன்(கனடா), இன்பநாதன்(நோர்வே), தபோநாதன்(கனடா), தனலட்சுமி(கனடா), ஆனந்தநாதன்(நோர்வே), இராஜலட்சுமி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

சந்திரிக்கா(கனடா), கிரிசாந்தி(நோர்வே), துசிதரா(கனடா), மனோகரகுமார்(கனடா), சுதர்சினி(நோர்வே), சுபாகரன்(கனடா ) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

திவ்யலட்சுமி, சந்தோஷ்நாதன், ஜெசிக்கா, சஞ்ஜீவ்நாதன், இனுஷ்நாதன், டினிஸ், திவிஸ்நாதன், சஜானலட்சுமி, ஹரின், டேனிக்காலட்சுமி, லக்‌ஷீதா லட்சுமி, ஜகானா, சௌமியா, லிவிந்நாதன், ஜெனிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போதைய நாட்டு விதிமுறைகளை  கருத்தில் கொண்டு அன்னாரின் இறுதிச்சடங்குகள் தனிப்பட்ட முறையில் குடும்பத்தினருடன் மட்டுமே நடைபெறுமென்று ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்