யாழ். மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த சரஸ்வதி குணரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:09/04/2023
அன்னைக்கு ஓர் சமர்ப்பணம்
ஆண்டு ஒன்று ஆனதம்மா
ஆனாலும் ஆற முடியவில்லை எம்மால்
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்
ஆழ்ந்த போது கண்முன்னே
அம்மாவின் பாச நினைவுகள் தான்
விண்ணுலகில் வாழ்ந்திடினும் நினைவுகளால்
எம் மனதில் வாழ்கின்ற எம் குல விளக்கே! அம்மா!
நித்தம் நித்தம் எங்கள் மனதில்
எண்ணங்களும் செயல்களும் நீங்களாக
கண்களை மூடிக்காட்சிப்படுத்தி
கனவுகளில் காணுகின்றோம் கணப்பொழுதும்
நினைவுகள் தான் எம்மிடம்
நிஜத்தில் இறைவன் தி௫வடியில்
மீளாத்துயில் கொள்ளும்
உங்கள் பாதங்களுக்கு
கண்ணீர்த்துளிகளால்
சமர்ப்பணம் செய்கின்றோம் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கும்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்....
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!