Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 24 DEC 1950
மறைவு 11 JUN 2023
அமரர் சரஸ்வதி குணலிங்கம் 1950 - 2023 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஆனைப்பந்தியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரஸ்வதி குணலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:31/05/2024.

அம்மா என்று அழைத்திட யாருண்டு
உயிராய் உனை நேசித்தோம்
உயிரினும் மேலாய் எமை நேசித்தீர்
வேதனையைச் சொல்லிட
வார்த்தைகள் இல்லையம்மா
வாழ்வில் பல உறவுகள் இருந்தாலும்
எம் தாய்க்கு நிகர் யாரோ

ஒரு பொழுதும் உமை
மறவாமல் நாம் இருந்தோம்
ஓயாது உம் குரல் இனிமை எதிரொலிக்க
ஒவ்வொரு கணமும் நினைத்து
நினைத்து அழுகின்றோம்...

நீங்கள் எங்களை விட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள் அன்பு முகம்
எம் நெஞ்சில் நிலைத்து நிற்கும்..

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கும்
பிள்ளைகள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள்..!

தகவல்: குடும்பத்தினர் -சபேசன் (மகன்).

Photos