அமரர் சரஸ்வதி கந்தையா
வயது 85
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Saraswathi Kandaiya
1935 -
2020
அம்மம்மாக்குட்டி அம்மம்மாக்குட்டி என அன்பாய் அழைப்பது உங்கள் காதில் கேட்கவில்லையா? நீங்கள் நீள் உறக்கம் கொண்டதனால் நிலை தடுமாறுகிறது எங்கள் உள்ளம். இரண்டு வயதில் உங்கள் திருமுகம் கண்டேன் - எனக்கு அகரம் எழுத பழக்கிய ஆசான் நீங்கள், சிகரத்தில் நான் ஏற துணையாக நிற்பீர்கள். கல்வியிலும் கலையிலும் சிறந்த நீங்கள் விருப்புடன் நான் பயின்றிட வித்திட்ட விவேகி அல்லவா? உங்கள் கையை பிடித்து நடை பயின்ற வேளையில் ஊர்க்கதைகள் பல பேசி என்னை ஊருடன் உறவாட வைத்தீர்களே! பண்புடனும் பரிவுடனும் எல்லோரையும் அன்பாய் அரவணைக்கும் நீங்கள் மாண்புடன் வாழ்ந்த வாழ்வே மண்ணுலகில் எமக்கு எடுத்துக்காட்டு! வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த அம்மம்மாக்குட்டி, வானுலகில் தெய்வமாய் நின்று வழிகாட்டுங்கள்.
Write Tribute