வவுனியா செட்டிக்குளம் பெரிய நொச்சிக்குளம் நேரியகுளத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்தியாப்பிள்ளை மரின் டினேஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
சிப்பிக்குள் முத்தாய் அன்னையின்
கருவறையில் இப்புவியில் உதித்த
செல்கதிர் சுடரே ஓராண்டு கடந்த
பின்பும் ஓயவில்லை நினைவலைகள்....
மகனே என அணைக்க முடியாத
சோகத்தால்- எம் மனம் இருண்டு
போய் உள்ளதைய்யா.!
அன்பு என்னும் பறவை
சிறகடித்து வானில் பறந்தது!
விதி என்னும் அம்பினால்
அது அடிபட்டு மாய்ந்தது!
வாழ்ந்த கதை முடியமுன்
இறந்திடவா நீ பிறந்தாய்!
நீ ஆண்ட கதை அழிவதில்லை
நீ எங்கே சென்றாய் தனியே!
உன்னை பிரித்து விட்டு
எங்களை பிரிந்து விட்டு சென்றது ஏன்?
தனிமையிலே உன்னை இழந்து விட்டு
நாங்கள் அழுகின்றோம்....
உன் மலர்ந்த பூ முகமும்ம
கிழ்ச்சி பொங்கி நிற்கும்
உன் முத்தான புன்சிரிப்பையும் பார்ப்பது எங்கே?
உன் வரவை பார்த்து பார்த்து ஏங்குது எம்மனம்!
பாச நதியில் ஒர்வஞ்சம் அறியா ஈரநெஞ்சம்
படைத்தவனே மறுபிறப்பு என்று ஒன்று
உண்மையெனில் நீயே
எமக்கு தம்பியாக வேண்டும்
வையக வாழ்வு முடியும் வரையில்
உனது இனிய நினைப்போடே
எங்கள் காலம்...
உன் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்.