Clicky

பிறப்பு 02 JAN 1963
இறப்பு 10 AUG 2019
அமரர் சந்திரகுமார் பாலசுப்பிரமணியம் (சந்தி)
வயது 56
அமரர் சந்திரகுமார் பாலசுப்பிரமணியம் 1963 - 2019 அளவெட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ரஞ்சித் தவராஜா - பிராம்ப்டன், கனடா 19 AUG 2019 Canada

ஏறத்தாழ பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் மட்டுமே அறிமுகமான இவர் எனக்கு எந்த வகையிலும் ரத்த உறவோ தூரத்து உறவோ கிடையாது. இருந்த போதும், அவரது சகோதரியின் பெறாமகன் ஜெகன் அழைத்தது போல "சந்தி சித்தப்பா" என்றே நானும் காரணம் இல்லாமல் இவரை அழைப்பேன். அழகிய வெறும் புன்னகையையும், அதட்டி மிரள வைக்காத மென்மையான குரல் வளமும் உடையவர் சந்தி சித்தப்பா. உறவுகள் மற்றும் நண்பர்களின் கொண்டாட்ட வீடுகளில் இவர் சமுகம் தரும் சமயங்களில் இவரது கதிரைக்கு அருகில் இருப்பவர் முதியவர் ஒருவராய் இருக்கட்டும், இடைவயதினராய் இருக்கட்டும், இளைஞர் ஒருவராய் இருக்கட்டும். ஏன்…. ஒரு குழந்தையாய் கூட இருக்கட்டும். எவராய் இருந்தாலும் அவர்களுடைய வயதினராய் தன்னை உருவகித்து அவர்களுக்கு ஏற்றாற் போல அவர்களுடன் சகஜமாகப் பேசும் திறன் உள்ளவர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவ்ருடைய மனைவியும் அவரைப்போன்ற குணத்தில் அனைவ்ருடனும் அன்பாகப் பேசும் ஒருவராய் அமைந்தமை அவர் செய்த பாக்கியம். எந்தவொரு மனத்தாங்கல்களுக்கும் இடமில்லாமல் இவர்களுடைய குடும்பம் ஒரு மகிழ்ச்சி நிறைந்த குடும்பமாய் அமைந்தமை இறைவன் சித்தம். அழகிய இரு பெண் குழந்தைகளுடன் பேறுபெற்ற வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்த சந்தி சித்தப்பா மீது கடவுளே பொறாமைப் பட்டிருப்பாரோ என்னவோ. இவரை அதிக காலம் வாழவிடாமல் தன்னுடன் இழுத்துக்கொண்டார். இவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் இவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.