திரு சந்திரபாபு சிதம்பரப்பிள்ளை
வயது 54
திரு சந்திரபாபு சிதம்பரப்பிள்ளை
1966 -
2020
வண்ணார்பண்ணை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பாபு உன் மரணம் தந்த சோகம்
எந்த ஆறுதல் வார்த்தைகளாலும் ஆறாதே!
உன் சிறு வயதிலேயே நீ காட்டிய அன்பாலும் பரிவாலும்,
உன் பால் நான் கொண்ட நேசம் ,
எக்காரணத்தாலும் மாறாதே!
அந்த நாள் மீண்டும் இனி என்றும் வாராதே!
ஊரில் பல கோயில்களில் நீ நட்ட
மரங்கள் பழுத்துக் குலுங்குதாம், நீ மட்டும்
போனதென்ன எதையும் அனுபவித்துப் பாராமலே!
பாபு உன் மரணம் தந்த சோகம்
எந்த ஆறுதல் வார்த்தைகளாலும் ஆறாதே!
பிறருக்கு உதவ உன்னைப் போல் ஒருவன்
நம் மத்தியில் உருவாகும் நிலை இனி
எப்போதும் நேராதே!
உன்னை இழந்த உன் மனைவி மக்கள்,
சகோதர சகோதரிகள் தவிப்பு என்றும் தீராதே!
உன் முயற்சிகளின் பலன், கை கூடி வருகையில்
நீ போனதென்ன எனும் தவிப்பின் ஓலம்
உன் காதுகளில் ஏறாதே!
பாபு உன் மரணம் தந்த சோகம்
எந்த ஆறுதல் வார்த்தைகளாலும் ஆறாதே!
மகேந்திரன் அண்ணா குடும்பம் . B. A. Thamby Lane, Vannarponnai
Write Tribute