Clicky

பிறப்பு 24 NOV 1966
இறப்பு 29 DEC 2020
திரு சந்திரபாபு சிதம்பரப்பிள்ளை 1966 - 2020 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
??கண்ணீர் அஞ்சலி ?? எம் தெருவின் தீராத விளையாட்டு பிள்ளையாய் திரிந்தவன், அன்பாலும் பண்பாலும் அனைவரையும் காந்தம் கொண்டு கவர்ந்தவன் எம்மை கண்ணீரில் கரைய விட்டு சென்றது ஏன்? உலகம் வாழ மரம் நட்டு மகிழ்ச்சி கண்டவன் மண்ணில் வீழ்ந்து மடிந்தது ஏன்? ஆடு மாடு கோழி நாய் எல்லாம் அணைத்து வளர்த்தவன் அன்பால் உலகை ஆண்டவன் அணைத்து போனானே? எம்மை தவிக்க விட்டு தனியா போனது ஏன்? எம் தெருவின் மண்ணின் புழுத்தியில் புரண்டு கிளித்தட்டும் கிட்டி பெல்லும் விளையாடியவன், கல்லேரிந்து மாங்காய் பிடுங்கி காக்கா கடிந்து பகிர்ந்து உண்டு மகிழ்ந்தவன் மாயமாய் மடிந்து போனானே!மறக்க முடியவில்லை உன் இழப்பை எம்மால் தாங்க முடியவில்லை.. எதற்கும் அஞ்சாத வீரமும் விவேகமும் கொண்டு வாழ்வில் வலிமை கொண்ட சூரன் சுழியன் பாபு.. உன் நினைவுகள் எம்மை சுற்றி சுற்றி வருகுது ஐயா எழுந்து எம்மை பாரும் ஐயா.. உனக்கா வாழாமல் ஊருக்கா வாழ்ந்த கர்ணனே எமக்கு ஏதும் என்றால் ஓடோடி வந்து துயர் துடைக்கும் தேர் கொடுத்த மன்னன் வள்ளலே பாபு ஏன் எம்மை விட்டு பிரிந்து போனாய்? கத்தி கதறி அழுகிறோம் ஐயா எழுந்து வாருமையா.. எண்ணெய் குளியல் இறைச்சி சமயல் வாய்க்கு ருசியா வறுவல் அள்ளி கொடுத்து கூடி இருந்து உண்ட உடல் மண்ணில் வாழாமல் விண்ணில் போனது ஏன்?உலகம் சுற்றும் வாலிபன் ஊருக்கா உழைத்தவன் தொலைவில் தொலைத்து போனாயே? கேட்டு துடியாய் துடித்து போனோம்.. உனக்கா எண்ணி வியர்வை துளிகளில் உன் எண்ணங்கள் நனைவாகும் நேரம் மறைந்து கனவாகி போனதே? கண்ணீர் குளமாகி கொள்ளுதடா நீ பிணமாகி போனதை எண்ணி.. நல்ல குணமானவன் குறிகிய வாழ்வை முடிந்து போனாயே? தாங்க முடியவில்லை எம்மால் தூங்க முடியவில்லை.. எழுந்து வாராயோ வந்து எம்மை பாராயோ? ஓடோடி வந்து பார்க்க எத்தனை பேர் இருக்க முடக்கத்தில் முடங்கி போனாயே? உன்னை கடைசி ஒரு தடவை பார்க்க கூட நாதியற்று போனோம் அன்னாரின் பிரிவால் வாடும் அனைவருக்கும் எமது ஆழ்த்த அனுதாபங்கள் அவரின் ஆத்துமா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் ?சாந்தி!சாந்தி!சாந்தி திலகம்,பத்மா,சிவா,குகன்,உமா அம்மா குடும்பம்
Write Tribute