யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், நுணாவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தம்மா கந்தசாமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்பின் திருவுருவமே;
மீளாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரே;
ஆறாதம்மா உன் பிரிவின் துயரம்;
மறவோமா உன் சிரித்த முகம் இன்றும் எம்;
கண்முன்னே மறக்க மனம் முடியுமா
இனி எப்போ உனைக்காண்போம்
ஏங்கித் தவிக்குதம்மா எம்மனம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Dear Kanthasamy Uncle,Kala, Thabalasingam Uncle . It’s very sad and terrible to hear about your loss and I /we express my/our sincere sympathy to you and your family