யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், நவாலி வடக்கு, பிரித்தானியா லண்டன் East Bourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சாந்தலிங்கம் சாந்தகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
தந்தை எனும் இமயமே...
எம் அன்புத் தெய்வமே!
ஆண்டு ஒன்று ஓடி மறைந்தாலும் - எம்
ஆருயிர் தந்தையே உங்களை மறக்கவில்லை!
நிழல் தந்து எமைக் காத்த ஆலமரமே
நிஜமாகவே எங்களை விட்டு நீங்கிவிட்டீர்களோ?
தளர்ந்த போதெல்லாம் தாங்கிப் பிடித்தீர்கள்
தன்னம்பிக்கை ஊட்டி
எங்களைத் தழைக்க வைத்தீர்கள்
உன் விரல் பிடித்து நடந்த பாதைகள் எல்லாம்
இன்று உன் காலடித் தடம் தேடித் தவிக்கின்றோமே!
"பிள்ளைகளே" என நீங்கள் அழைக்கும் அந்த ஓசை
எம் வீட்டுச் சுவர்களில் இன்றும் ஒலிக்கிறது...
வேலை முடிந்து நீங்கள் வீடு வரும் வேளைகளில்
உன் புன்னகை காண எங்கள் கண்கள் ஏங்குகிறது!
கடமையெல்லாம் முடிந்தது என நினைத்தீர்களோ?
பாதி வழியில் எங்களைத் தவிக்க விட்டுச் சென்றீர்களோ?
கனவினிலாவது ஒருமுறை வந்து விடுங்கள் அப்பா - உன்
கனிவான முகம் கண்டு நாங்கள் ஆறுதல் கொள்வோம்!
எம் உயிர் உள்ளவரை உங்கள் நினைவுகள் எ
ம் நெஞ்சில் சுடராக எரிந்து கொண்டே இருக்கும்...
மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால் - உங்களுக்கே பிள்ளைகளாய்ப்
பிறக்கும் வரம் வேண்டுவோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்...