1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் சாந்தகுமாரன் கலாஜோதி
1958 -
2020
வண்ணார்பண்ணை, Sri Lanka
Sri Lanka
Tribute
25
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சாந்தகுமாரன் கலாஜோதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கு இலக்கணமாய்
பண்பிற்கு சிகரமாய்
பாசத்திற்கு ஒளிவிளக்காயிருந்து எமை
பாரினிலே எமை வளர்த்து
பரிதவிக்கவிட்டுச் சென்ற எம் தெய்வமே
கண்ணை இமை காப்பது போல் எமை
காவல் காத்த எம் காவல் தெய்வமே
கலையாத உங்கள் முகமும்
கள்ளமில்லாத உங்கள் சிரிப்பும்
காண்பது எப்போது எம் இதய தெய்வமே
உங்கள் உருவம் மறைந்தாலும்
நின் உயிர் எப்போதும் எம்மோடுதான்
இருக்கின்றது அன்புத் தெய்வமே
ஆண்டொன்டென்ன ஆயிரம் ஆண்டானாலும்
நித்தம் உங்கள் நினைவுகளோடு
நின் பாதமலர் பணிகின்றோம் பாசத்துடன்
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்