
திரு சண்முகநாதன் சைவநாதன்
இளைப்பாறிய பொறியியலாளர்
வயது 76

திரு சண்முகநாதன் சைவநாதன்
1948 -
2025
தெல்லிப்பழை வீமன்காமம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நான் அறிந்தும் பழகிய அன்பின் சைவநாதன் லண்டன் மாநகரில் Surrey என்ற இடத்தில் அமைந்த Kingston - upon-thames நகரில் ஒவ்வொரு வியாழனும் இயங்கும் கழகத்தின் பல உறுப்பினர்களில் சிறப்பூர் தெல்லிப்பளை நகரை பிறப்பிடமாக கொண்ட ஒரு புனித மாணிக்கம் தான் எமது அன்பின் சைவநாதன்.
தனது நற்பண்புகளால் பலரை கவர்ந்தவர். உதவும் மனப்பான்மை , சூது வாது அற்ற தன்மை , பெரியோருக்கு மதிப்பளிப்பது புகழை விரும்பாத தன்மை , ஒருவரை பற்றி குறை சொல்லும் பழக்கமில்லாதவர் , நெருக்கமானவர்களுக்கு அறிவு வழங்குவார்.விளையாட்டு துறையிலும் சளைத்தவரல்ல.இவரின் பிரிவு எங்கள் சங்கத்துக்கு பெரும் இழப்பு.இறைவன் தனது சொர்க்கபுரிக்கு அனுப்பிய அழைப்பிதழை ஏற்று எமதருமை சைவநாதன் தன் அருமை , மனைவி, மக்கள் , உறவினர் , எமது சங்க உறுப்பினர்களை விட்டு சென்றது பெரும் வேதனை. அவரின் புனித ஆத்மா சாந்தி அடையட்டும்.
ஓம் சாந்தி சாந்தி.
அன்பின் EEP அங்கத்தவர்கள்
Write Tribute
Sad to hear that Saiva has passed away. May his soul rest in peace. Our heartfelt condolences to Rathy and family. Vijaya & Sivaji