Clicky

தோற்றம் 26 FEB 1971
மறைவு 17 JAN 2021
அமரர் சண்முகலிங்கம் சஞ்ஜீவ்விஜே (Vijay)
உரிமையாளர் Londis Norfolk, யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்
வயது 49
அமரர் சண்முகலிங்கம் சஞ்ஜீவ்விஜே 1971 - 2021 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மானிப்பாய் மண்ணது மைந்தனே.. சண்முகலிங்கம்.. தனபாக்கியம் பெற்றெடுத்த அவர் அன்புறை மகனே... பெற்றோர் ஆசைப்படி அன்புறை இல்லறம் கண்டாயே.. நல்லறம் கண்டு உயர்வுற்று உளம் குளிர இரு மகன்கள் கண்ட மாமகனே.. காலத்தின் கோலமதால்... உன்னது இல்லற கனவு கலைந்ததே.. பிரிவுகளால் பேதமை கண்டாயோ.. விதியின் வினையதால் உன்னது மதியும் கலைந்திட்டதோ எங்கள் விஜே தம்பியே.. உடலும் இளைத்ததோ.. நோயுண்டாய்... பரிதவித்தாய்..பட்ட பாடு போதுமினி என்று.. காலம் கடந்ததோ.. காலனும் அழைத்தானோ... கண்ணிமைக்கும் வேளைக்குள்.. காணாதூரம் சென்றாயே.. இது தகுமோ.. தரணி விட்டு...மனமின்றியோ. மரண உலகு சென்றாயோ.. மனையும் மலைத்திட்டார்.. மக்களும்.. மனமுறைந்திட்டார்.. சிறு வயதுமுதல் உனை சீராட்டி பாராட்டி வளர்த்திட்ட.. உன்னுயிர் அக்காளும். அழுதழுது... மனதை இழந்தே...மரமானாள்.. .எங்கள் குடும்ப மலையை பறிகொடுத்தோமே.. பராபரமே.. என்னுயிர் உறவை.. எங்கழைத்தாய்.. இது தகுமோ.. இது தர்மம் தாணோ.. என்று.. பலவே..ஏங்கியே. மனமுடைந்து அழுகின்றாள்... விதி கண்டாய்.. மதியிழந்தாய்..மரணம் என்ற மாயை காண மாயன் வந்தழைத்திட்டான்.. என் செய்வோம்.. விதி இதுவாச்சே.. பரமனடி கண்டாயோ வீரமகனே.. உன் ஆத்மா.. அமைதி காணட்டும். ஒம்.. சாந்தி.. சாந்தி..
Write Tribute

Notices

மரண அறிவித்தல் Thu, 28 Jan, 2021
நன்றி நவிலல் Mon, 15 Feb, 2021