

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன், Norfolk ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகலிங்கம் சஞ்ஜீவ்விஜே அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆலமரம் சாய்ந்தது விழுதுகள்
விழுந்து முலைக்கும் முன்னே
சூரியனும் மறைந்தது பறவைகள்
கூடு திரும்பும் முன்னே
கடலும் வற்றியது அலைகள்
கரை தொடும் முன்னே
கரம் பிடித்தவளை கண்ணீரில்
கை விட்டதேன் பாதியிலே
பிள்ளைகளையும் விட்டு
சென்றீரோ பரிதவிக்க!
உடன் பிறந்தவளையும் விட்டு- சென்றீரோ!
பெற்றவர்களிடம் அவசரமாக
கர்ணன் வழிவந்தோனே வாரி வழங்கினாயே
உதவியென்று உன்னை நாடி வந்தோர்க்கு
தோழோடு நின்றாயே தோழமையாம்
நண்பர்களுக்கு
ஈராறு மாதம் சென்றும்
வற்றவில்லை எமது கண்ணீர்
தரணியிலே கடமைகள் முடியுமுன்னே
சென்றீரோ காலவனிடம்
ஏன் இந்த அவசரமோ எம்மையெல்லாம்
விட்டுச் செல்ல
....
அன்புள்ள ஆத்மா சாந்திக்காய்
வேண்டுகின்றோம்.
Vijay you will be remembered. Ohm Shanthi, Shanthi, Shanthi