Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 JUL 1926
இறப்பு 29 NOV 2019
அமரர் சங்கரப்பிள்ளை தங்கம்மா
வயது 93
அமரர் சங்கரப்பிள்ளை தங்கம்மா 1926 - 2019 குப்பிளான், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். குப்பிழானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சங்கரப்பிள்ளை தங்கம்மா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

பாசமுள்ள எங்கள் அம்மாவே
அன்பால் எங்களை காத்தவளே
பாசம் காட்டி எங்களை வளர்த்தவளே!

அன்பான எங்கள் பொக்கிஷத்தை
ஆண்டவனே பறித்தானே
ஆண்டுகள் ஐந்து முடிந்தாலும்
உங்களை ஏங்கி தவிக்கின்றோம் அம்மா!

எங்களையெல்லாம் கண்ணீர் கடலில் மூழ்க விட்டு
எங்கு சென்றீர்கள் அம்மா
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அம்மாவின் அன்போடு
உன் அன்பும் ஈடாகுமே அம்மா!!

பெற்றநாள் முதல் பாசம் காட்டி
நம்மை வாழ்வாங்கு வாழவைத்து
இன்பம் நுகர்ந்து பெருமை
அடைந்த எம் அம்மாவே!

சொந்தங்களோடு வந்தோரையும்
அரவணைத்து வாழ்ந்த அருமை அம்மாவே!
ஆண்டுகள் 5 சென்றாலும் ஆறவில்லை
உங்கள் பிரிவின் துயரம்

ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அவை அனைத்தும் ஈடாகுமோ
உங்கள் அன்பிற்கு அம்மா..!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: அன்பன் சங்கரப்பிள்ளை(மகன்) மருமகள், பேரப்பிள்ளை.

Summary

Photos

No Photos

Notices