

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்குளம், வவுனியா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சங்கரப்பிள்ளை காமாட்சி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 28-02-2025
நீலவிழிகள் நீர்சொரிய நிறைந்ததுவோ மூன்றாண்டு நிறைநிலவே! நீங்கிடாதே உம் நினைவு
மண்ணிலே வீழ்ந்த
மழை மீண்டும் விண்ணுக்கே
செல்லுமென்பார் விண்ணுக்குச்
சென்ற நீங்கள் மீண்டும்
மண்ணுக்கு வரமாட்டீரோ ?
எம் கண்ணிலே வழியும்
நீரை உங்கள் கடைக் கண்ணால்
பாருங்கள்! உமை
நினைத்தே உருகின்றோம்!
ஓராயிரம் ஆண்டுகளானாலும்
காற்றும், கடலும், வானும்,
கருமுகிலும் இவ்வுலகில் போற்றி
வாழ்கின்ற காலம்வரை...
எம் கடைசி மூச்சும் பேச்சும்
இவ் உலகில் வீற்றிருக்கும்
இறுதி காலம்வரை... உங்கள்
நினைவுகளெல்லாம் எங்களோடு
என்றென்றும் நிறைந்திருக்கும் வணங்குகின்றோம்..|
மறு ஜென்மம் ஒன்று இருந்தால்
நாங்கள் தாயாகவும் நீங்கள் சேயாகவும்
பிறக்க வேண்டும்
அப்போது தான் எமக்காக
நீங்கள் பட்ட துன்பத்தை
நாம் தீர்க்க முடியும்
மறு ஜென்மம் ஒன்றிருந்தால்
மறுபடியும் சேயாக எம்மடியில் பிறந்திடுவீர்கள் அம்மா...
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்!