1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
சுவிஸ் Schaffhausen ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சஞ்சீவ் செந்தூரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மீண்டும் நீ வருவாயா மகனே....!
நீ வளமோடு வாழ்வாய் என
வாஞ்சையுடன் நாங்கள் கண்ட
கனவு ஏராளம்...!
கண் மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதினில் நடந்தவைகள்
நிஜம் தானா என்று நினைக்கும்
முன்னே மறைந்தது ஏனோ?
சிரித்த உன் அழகு வதனமும்
பேசிய உன் செல்லக் கதைகளும்
உறைந்து நிற்கின்றது- எங்கள்
உள்ளங்களில் அழியாத ஓவியமாக!
உன் சிரிப்பை நாம் ரசித்த
போதெல்லாம் தெரியவில்லை
எம் மொத்தச் சிரிப்பையும் நீ
எடுத்துச் செல்வாய் என்று!
நீ இல்லா வெறுமை உலகத்தில்
உன் நினைவுகளுடன் எம் பயணம்
நாளும் தொடர்கிறது உன் வரவை எதிர்பார்த்து..!
கருவறையில் இருந்து இறங்கி
கல்லறை நோக்கிச் சென்று
1 வருடம் ஆனதையா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்