யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகலிங்கம் சங்கீபன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எமது அன்பிற்குரிய குடும்பத்தலைவனே
அன்பிற்கும், பண்பிற்கும், பாசத்திற்கும்,
நேசத்திலும் எங்களை மகிழ்வித்து
எனது அன்பிற்கினிய கணவனாக
உமது குழந்தைகளுக்கும் ஒளிகாட்டியாக
ஒளி தந்த கலங்கரை விளக்கே
நீங்கள் அணையமாட்டீர்கள்
என்றுதான் நினைத்தோம்..!
ஆனால் இப்படி நீங்கள் எங்களை
ஏமாற்றுவீர்கள் என்று நாங்கள்
கனவிலும் நினைக்கவில்லை
எங்கள் இதயம் முழுவதும்
நீங்கள் தான் நிறைந்துள்ளிர்கள்
31 நாட்கள் சென்றுவிட்டன
ஆனால் உங்கள் நினைவுகள்
எம்மால்
என்றும் மறக்க முடியாது
எங்கள் இதயத்தில் நீங்கள் தான்
என்றும் நிறைந்துள்ளீர்கள்
ஆண்டவர் அடியில் ஆத்ம சாந்தியுடன் இளைப்பாறி இருங்கள்
என்றும் உங்களுக்காக இறைவனை வேண்டி நிற்கும்
மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் .....
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூ றியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.