

விவேஅண்ணை, இதை நீங்கள் வாசிக்க இனி சாத்தியமில்லை. ஆனாலும் எழுதுகிறேன். மூத்தவர்களோடு நெருங்கி உறவாட எனது இளமைப் பருவத்தில் ஊரில் சாத்தியமில்லாமல் இருந்தது. மதிப்புக் கொடுத்து ஒதுங்கி நடப்பதுதான் அன்றைய எங்கள் சமுதாயக் கட்டுப்பாடு. 2002இல் நான் அவுஸ்திரேலியா வந்த போது, அந்தக் கட்டுப்பாடு களையப் பட்டிருந்தது. உங்களது வயதுக்கு நான் வரமுடியாது போனாலும் எனது வயதுக்கு இறங்கி வந்து என்னுடன் பழகினீர்கள். ஒவ்வொரு தடவையும் எனது அம்மாவைப் பார்க்க நான் அவுஸ்திரேலியா வரும் போதெல்லாம் உங்கள் வீட்டுக்கு அழைத்து விருந்து வைப்பீர்கள். உங்களுக்கு இருதய அறுவைச் சிகிச்சை நடந்திருந்த நிலையிலும் கூட உங்கள் வீட்டுக்கு அழைத்து அறுசுவை தந்தீர்கள். எனது தாயார் காலமான போது நியூசிலாந்து வந்து அணைத்து ஆறுதல் தந்து போனீர்கள். மரணம் நிச்சயமானது. உங்கள் கனிவான பார்வையும், இனிதான பேச்சும், அழகான உங்களது அந்தச் சிரிப்பும் என்னுள் என்றும் நிரந்தரமானது. அன்புடன் தம்பி செல்வகுமாரன் யேர்மனி
Our deepest condolences to your family ஓம் சாந்தி சாந்தி சாந்தி?