யாழ். நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், லண்டன் Rugby ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை சண்முகநாதன் அவர்கள் 24-04-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருந்ததி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சந்திரவதனி, ரஞ்சிதவதனி, அரவிந்தன், சிவகாமி ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
மதிவண்ணன், திருச்சிவம், பிரான்சுவா, சாயிரமணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, தங்கம்மா, சுந்தரலிங்கம், ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனலெட்சுமி, காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, ஜானகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோபிநாத், பிறேம்நாத், நிவேதா, கவின், கவிதா, கபில், Alex, Aude, வித்தேஸ்வரன், லிவானியா, ரவீணா, தர்சிகா, மேரி, நிக், உசெப்ப ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆலோ அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
God bless you uncle, wishing you have a rest in peace. you have left with your lovely memories and we always thinking about you rest of our life