யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், காரைநகர், வவுனியா, கொழும்பு, நல்லூர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை செல்லத்துரை அவர்களின் 28ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 19-12-2025
எம் அருமை தந்தையே
எம்மைவிட்டு எங்கு சென்றீரோ ...
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து இருபத்தெட்டு ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் அப்பா ...
ஆண்டவன் படைப்பினை
ஆழமாய் பார்த்தாலும்!
பாசமாய் உங்களின்
பண்பினை நினைகின்றோம்!
நேசமாய் உங்களின்
புன்னகையை ரசிக்கின்றோம்!
எம்மை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில் என்றும்
சுழல்கிறதே
அப்பா...
காவல் தெய்வமாய் எங்களோடு
என்றும் நீங்கள் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்....
அன்புத் தந்தையே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல பயரிகூடல் முருகன் பாதராவிந்தங்களை
பணிந்து நிற்கின்றோம்.