Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 OCT 1948
இறப்பு 23 APR 2020
அமரர் சங்கரலிங்கம் அன்னலெட்சுமி (லிங்கதேவி)
வயது 71
அமரர் சங்கரலிங்கம் அன்னலெட்சுமி 1948 - 2020 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த சங்கரலிங்கம் அன்னலெட்சுமி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 17-04-2022 

புங்கை நகரிலுதித்த புண்ணிய வதியே
பங்கமில்லா வாழ்வை பாங்குடன் வாழ்ந்தாயே
சங்கரலிங்கத்தை கரம்பிடித்து சத்தியவதியாய் இருந்தாயே
செங்கமலத்தி லுறைபவளைத் தினமும் துதிப்பாயே

அன்னையின் வடிவம் அகிலத்தில் நீயே
இன்முகத்துடன் உறவுகளை இன்புற்று மகிழ்வாயே
கன்னல் பேச்சும் கனிவுப் பார்வையுமே
தன்னம்பிக்கையை நாளும் தயவுடன் புகட்டுவாயே

வாழ்வியலின் தத்துவத்தை வகுத்தே காட்டினாய்
ஆழ்மனதினில் தினமும் ஆண்டவனை நினைத்திடுவாய்
காவல் தெய்வமாய் வழி காட்டி இருந்தவளை
காலனும் தன்னிடம் கருணையின்றிக் கூப்பிட
நீயும் சென்றுவிட்டாயே அம்மா

ஈராண்டுகள் சென்றாலும் உன்நினைவுகள்
என்றும் மாறாது அம்மா
ஈரவிழிகளுடன் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிராத்திக்கிறோம்


தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்