1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 OCT 1948
இறப்பு 23 APR 2020
அமரர் சங்கரலிங்கம் அன்னலெட்சுமி (லிங்கதேவி)
வயது 71
அமரர் சங்கரலிங்கம் அன்னலெட்சுமி 1948 - 2020 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த சங்கரலிங்கம் அன்னலெட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

முதலாம் ஆண்டு நீங்காத நினைவுகளில்...அம்மா

எங்களை எல்லாம் அன்பினால் வழிநடத்திய
எங்கள் பாசத்திற்குரிய அம்மா
எங்கள் மனங்களில் ஞாபகங்களாய்
இன்று ஓா் ஆண்டு ஆகிறது அம்மா.

உங்கள் பாசத்திற்குரிய பிள்ளைகள் நாங்கள்
தொலைதூரதேசங்களில் இருந்து உங்கள் அன்பு முகம்காண
ஓடோடி வருவோமே அம்மா வரும்போதெல்லாம் எமக்கு
மகிழ்வைத்தந்தெல்லாம் உங்கள் அரவணைப்பும்
கருணையான வார்த்தைகளும் அன்பானமுகமும்
அழகான முல்லைசிரிப்பும் தானே அம்மா.
நீங்கா நினைவுகளாய் இன்றும் எமக்குள் ஒலிக்குதம்மா.

 ஆனால் இன்று எங்களுடன் நீங்கள் இல்லையம்மா
நினவுகள் மட்டுமே இன்று எமக்குள் உயிரோட்டமாய் ஆயிரம்
உறவுகள் இங்கிருந்தலும் அம்மா என்ற உறவு இனிவருமா.

 காலத்தின் அசாதாரண சூழ்நிலையால் உங்கள் பாசமுகத்தினை
பார்க்க முடியவில்லயே அம்மா.

உங்கள் இறுதிகணங்களில்கூட அருகிலிருக்க
முடியவில்லையே அம்மா.

யாருக்கு யார் ஆறுதல் சொல்வதென்று தெரியாமல்
தொலைதூரதேசங்களில் உங்கள்பிள்ளைகள் நாம்
ஆதரவற்று துடித்து நின்றோம் அம்மா.

 அம்மா உங்கள் இறுதிநேர ஏக்கமெல்லாம் உங்கள்
அன்பு பிள்ளைகள் முகம்காண ஏங்கித்தவித்திருக்கும்
 என்று எண்ணும் போதெல்லாம் நெஞ்சம் கனக்கிறது
நாங்கள் நினத்துகூட பாரத்ததில்லை காலமும் சூழ்நிலைகளும்
இப்படி மாறுமென்று இருந்தும் காலமும் சூழ்நிலைகளும்
கடந்து செல்ல நம்மை நாமே தேற்றிக்கொண்டு பயணிக்கறோம்.

 எங்கிருந்தாலும் எப்பொழுதும் உங்கள்
அன்பும் ஆசியும் கிடைக்கவேண்டும் அம்மா.

 நிஜத்தில் இறைவனுடன் கலந்துவிட் உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனை வேண்டி பிரார்த்திக்கின்றோம்.

 ஓம் சாந்தி  ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்